Kalaignar Karunanidhi
03/01/2017 at 10:13. Facebook
கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 65வது பிறந்த நாளினை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது.
4-1-2017 புதன் அன்று நடைபெறும்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

* * *
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 20-12-2016 செவ்வாய்க் கிழமை அன்று, சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வருகிற 4-1-2017 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறும்.

பொருள் : கழக ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை.

குறிப்பு :...
View details ⇨
கிருஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி!

கிருத்துவ சமுதாய மக்கள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் கிருத்துமஸ் திருநாள் 25.12.2016 அன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

கிருத்துவ சமயம் பரப்ப வந்த மேலை நாட்டு மதகுருமார்கள் தமிழகத்தில் ஏழை எளியோர், குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களிடையே சமயப் பணிகள் ஆற்றியதுடன், அவர்களிடம் கல்வி, பொது சுகாதாரம்...
View details ⇨
Kauvery Hospital Press Release.
தலைவர் கலைஞர் உடல் நலம்:

தலைமைக் கழக அறிவிப்பு - 17.12.2016

காவேரி மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் தேறி, கடந்த 7ஆம் தேதி அன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு, 15-12-2016 அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. நேற்றையதினம் காவேரி மருத்துவ மனை...
View details ⇨
தலைவர் கலைஞர் தலைமையில்

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்

பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 20-12-2016 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள் : கழக ஆக்கப்பணிகள்
தலைவர் கலைஞர் உடல்நலம்.

தலைமைக் கழக அறிவிப்பு

​தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவ மனை யில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று, நேற்றையதினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், தலைவர் கலைஞர் அவர்கள் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டு மென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள்...
View details ⇨
துக்ளக் ஆசிரியர் சோ மறைவு - இரங்கல்

தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ- ராமசாமி அவர்கள் இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் .

பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக் கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும்...
View details ⇨
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு- இரங்கல்!

​#jayalalithaa அவர்களை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும், இலட்சக்கணக்கான தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம் பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து, புகழ் எய்தி, அதன் பின்னர் எனது அருமை நண்பர், புரட்சி நடிகர்...
View details ⇨
என்னரும் தளகர்த்தர் கோ.சி. மணி, எங்கோ போய் விட்டாரே?

எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?

காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் என்னிடம், தஞ்சை மாவட்டத்தில் எனக்கு தளகர்த்தராகவும், உற்ற காவலராகவும் இருந்து கழகம் வளர்த்த ...
View details ⇨
தலைமைக் கழக அறிவிப்பு

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் - ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான திரு. கோ.சி.மணி அவர்கள் இன்று (2.12.2016) இரவு மறைவெய்தினார்.

அவரது மறைவினையொட்டி நாளை (3.12.2016) முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாட்களுக்கு...
View details ⇨