M. K. Stalin
03/01/2017 at 12:47. Facebook
உயிரினும் மேலான அன்புத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்முகத்துடன் என்னை வாழ்த்திய போது... மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு!
M. K. Stalin
03/01/2017 at 08:26. Facebook
நாளை முதல் (மார்ச் 2) ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையை தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்த தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர், மக்கள் நலம்...
View details ⇨
M. K. Stalin
03/01/2017 at 05:29. Facebook
“சூளுரை ஏற்போம்”

உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் சூளுரை மடல்.

கழகத்தினரைக் காணும் போதெல்லாம் களிப்புறுவதும், அவர்களுடன் உரையாடி உற்சாகமடைவதும், தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்திக் கழகத் தோழர்களுடன் களம் புகுவதில் தனிச்சுகம் அடைவதும் என வாழ்வில் ஒவ்வொரு நாளும், "இன்று புதியதாய்ப் பிறந்தோம்" என்ற இன்பம் ஏற்படுகிறது என்றாலும்,...
View details ⇨
M. K. Stalin
02/26/2017 at 07:59. Facebook
குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தியாவின் நீதித்தலைமை அளித்துள்ள இந்தத்தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்...
View details ⇨
M. K. Stalin
02/26/2017 at 07:00. Facebook
“உரிமையுடன் வேண்டுகிறேன்”

உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேண்டுகோள் மடல்.

ஒரே இல்லத்தில் வாழ்ந்து சதிச் செயலில் இறங்கி லஞ்ச ஊழலில் ஈடுபட்டு சொத்துகளை வாங்கிக் குவித்த குற்றவாளியின் பினாமி ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக் களங்களை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது....
View details ⇨
M. K. Stalin
02/26/2017 at 05:58. Facebook
சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா, திருமதி என்.சசிகலா, திருமதி.இளவரசி, திரு.வி.என்.சுதாகரன் ஆகிய நால்வரும் கூட்டுச்சதி செய்தார்கள் என்றும், அவர் முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்தார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில் குற்றவாளியின் பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி...
View details ⇨
M. K. Stalin
02/24/2017 at 16:21. Facebook
M. K. Stalin
02/24/2017 at 12:33. Facebook
"மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" என்று மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒன்றை முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் மறைந்த முன்னாள் முதல்வரின் பிறந்த நாளில் இதுபோல அறிவிக்கப்பட்டு...
View details ⇨
M. K. Stalin
02/24/2017 at 10:07. Facebook
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் திட்டமிட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்.

மாண்புமிகு திரு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு,

வணக்கம்.
...
View details ⇨
M. K. Stalin
02/24/2017 at 09:41. Facebook
இன்று காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் விசாரித்தேன். அன்னையார் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி அவர்களும் உடனிருந்தார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், சட்டமன்ற நிகழ்வுகள் கூறித்து...
View details ⇨
M. K. Stalin
02/23/2017 at 17:36. Facebook
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து டெல்லியில் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் முறையிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி இன்று நேரில் அளித்த மனுவின் தமிழாக்கம்:

மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக சட்டமன்றத்தில் மிகப்பெரிய எதிர் கட்சியாக திகழ்ந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழக ஆளுநர்...
View details ⇨
M. K. Stalin
02/22/2017 at 07:09. Facebook
சட்டப் பேரவையில் அதிமுகவின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து இன்று காலை 9 மணியிலிருந்து திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறேன். கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் பங்கேற்று இருப்பது ஊக்கமளிக்கிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கட்சி வித்தியாசம் பார்க்காமல் மக்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்று இருப்பது சட்டமன்றத்தில் நிகழ்ந்த ஜனநாயக படுகொலையை...
View details ⇨
தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமைமிக்க மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் மத்திய தொல்லியல்துறை மூலம் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தமிழக நாகரிகத்தின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் 5300க்கும் மேற்பட்ட பல அரிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தமிழர்களின் நாகரிகம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் கிடைத்த அந்த கீழடி அகழாய்வு பணியை திடீரென்று மத்திய அரசு பாதியில்...
View details ⇨
'Saturday the 18th' - My View
“துரும்பைத் தூணாக்குவோரிடம் விழிப்புணர்வாக இருந்து கண்ணியம் காப்போம்”

ஜனநாயகத்தைப் புதைகுழிக்குத் தள்ளும் வகையில் தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் (பிப்ரவரி 18) குற்றவாளியின் பினாமி ஆட்சியினர் திட்டமிட்டுக் கொடுக்க, அதற்கேற்ற வகையில் ஒரு தரப்பாக சபாநாயகர் செயல்பட்ட விதத்தைக் கண்டு வாக்காளர்களான தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

’எங்கள் வாக்குகளை ரகசியமாகப் பதிவு...
View details ⇨
தமிழக சட்டப்பேரவையில் 18-2-2017 அன்று ஆளும் அ.தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை, அவை மரபுகளுக்கு மாறாக, திட்டமிட்டு, காவல் துறை உயர் அதிகாரிகளை சட்டமன்றத்துக்குள் வரவழைத்து, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கழக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றி விட்டு, சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள...
View details ⇨
“ஜனநாயகத்தின் கறுப்பு நாள்! விடியல் சிவப்பாக்க அணி திரள்வோம்!”

உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் இலட்சியப் பயண மடல்

ஜனநாயகத்தில் மக்களின் குரலே மதிப்பு மிக்கது. அவர்களின் தீர்ப்பே மகத்தானது. ‘தமிழகத்தில் நடைபெறும் குற்றவாளியின் பினாமி ஆட்சியைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்பதே தமிழக மக்களின் இன்றைய ஒரே குரல் - ஒற்றை நோக்கம். மக்கள்...
View details ⇨
இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன்.
மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை...
View details ⇨